மங்களமேடு:
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், பெருமாள்பாளையம், சிறுகநத்தம் காலனியை சேர்ந்தவர் அமிர்தராஜன்(வயது 32). ெபரம்பலூர் மாவட்டம் ஒதியம் பகுதிக்கு வந்த இவர் நேற்று இரவு ஒதியம் பிரிவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் வல்லிபுரத்தை சேர்ந்த மாரி(55), குன்னம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.