பால் வியாபாரியை தாக்கியவர் கைது

சுரண்டை அருகே பால் வியாபாரியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-22 19:36 GMT
சுரண்டை:

சுரண்டை அருகே இடையர்தவணை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் கண்ணன் (வயது 21). பால் வியாபாரி. நேற்று மாலையில் கண்ணன் தனது நான்கு சக்கர வாகனத்தில் பால் ஏற்றிக்கொண்டு இடையர்தவணையில் இருந்து சுரண்டைக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒருவழிப்பாதை வழியாக திருமண மண்டபம் அருகே வந்தபோது அப்பகுதியில் நின்றிருந்த தங்கசாமி மகன் கார்த்திக் (32) என்பவர் மதுபோதையில் கண்ணனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது‌. இதில் காயமடைந்த கண்ணன் சுரண்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தார்.

மேலும் செய்திகள்