இளையான்குடி ஒன்றியம் ஆக்கவயல் கிராமத்திற்கு தேவகோட்டை, மானாமதுரை, பரமக்குடி, சிவகங்கை, மதுரை ஆகிய 5 ஊர்களிலிருந்து பஸ்களை இயக்கும் வகையில் புதிய வழித்தடங்களை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், ஒன்றிய கவுன்சிலர் செழியன், ஊராட்சி மன்ற தலைவர் ராதாரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், ஒன்றிய செயலாளர்கள் ஆறு செல்வராஜன், வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.