அரூர் அருகே வீரபத்திரசாமி கோவில் திருவிழா தலை மீது தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரூர் அருகே வீரபத்திரசாமி கோவில் திருவிழா நடந்தது. இதில் தலை மீது தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2021-08-22 16:51 GMT
அரூர்:
அரூர் அருகே உள்ள மந்திகுளம்பட்டி கிராமத்தில் குரும்பர் இன மக்களுக்கு சொந்தமான வீரபத்திரசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் ஆண்டுதோறும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு வீரபத்திரசாமி கோவில் விழா நடைபெற்றது. விழாவையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் தலை மீது தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்