திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று குறைந்து வந்து கொண்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 70 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 676ஆக உள்ளது.
இதுபோல் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 72 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 916-ஆக உள்ளது. மேலும், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 847 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 913-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.