திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் - கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-08-22 13:36 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அங்கு நடந்து வரும் பணியின் தன்மை குறித்து ஒவ்வொரு தளத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணியின் தன்மை குறித்தும், பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். 

அவருடன் மருத்துவ கல்லூரி கட்டிடம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் முத்தமிழரசு, உதவி செயற்பொறியாளர்கள் மனோகரன், ரேவதி, சிவசுப்பிரமணியம், அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்