கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்
திருப்பூர் மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாநகரில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு 2வது தவணை
திருப்பூர் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
திருப்பூர் மாநகரில் இன்று திங்கட்கிழமை கோவிஷீல்டு தடுப்பூசி 2வது தவணை கீழ்கண்ட இடங்களில் தலா 100 பேருக்கு செலுத்தப்படுகிறது. அதன்படி சாமுண்டிபுரம் மகேஷ் வித்யாலயம் பள்ளி, சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ரங்கநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
வெங்கமேடு வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி, ஆத்துப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.என்.ரோடு சத்தியசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமராஜ்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.
நெசவாளர்காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, எம்.எஸ்.நகர் நிர்மலா மெட்ரிக் பள்ளி, பாண்டியன்நகர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, நெருப்பெரிச்சல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கங்காநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பிச்சம்பாளையம்புதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் போடப்படுகிறது.
கருமாரம்பாளையம்
இதுபோல் ஏ.எஸ்.பண்டிட்நகர் எஸ்.எஸ்.ஏ., மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மண்ணரை முனிசிபல் நடுநிலைப்பள்ளி, அமராவதிபாளையம் ராஜலிங்கம் அரசு உதவி பெறும் பள்ளி, ரங்கேகவுண்டன்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காங்கேயம் ரோடு செயின்ட் ஜோசப் கல்லூரி, காங்கேயம் ரோடு வித்யா விகாசினி மெட்ரிக் பள்ளி.
செல்லப்பபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கே.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாலிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ராயபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கருப்பகவுண்டன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஜனசக்திநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குப்பாண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கதிரவன் மெட்ரிக்குலேசன் பள்ளி, குமரன் கல்லூரி விநாயகர் கோவில் கல்யாண மண்டபம்,
குளத்துப்புதூர்
குளத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
------