காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தது.
மீன்சுருட்டி:
திருப்பூர் செந்தில்நகரை சேர்ந்தவர் காவியா(வயது 30). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த அய்யப்பன் நாயக்கன் பேட்டை கிராமத்தை சேர்ந்த சிற்றரசனும்(30) வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களுக்கு தெரியாமல் திருப்பூர் பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு நேற்று மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதுபற்றி இன்ஸ்பெக்டர் கோபி விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் தனது மகள் காணாமல் போனதாக காவியாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.