நீர்பிடிப்பு பகுதியில் இருந்த கோவில் இடிப்பு

நீர்பிடிப்பு பகுதியில் இருந்த கோவில் இடிப்பு

Update: 2021-08-21 20:30 GMT
புதூர்
மதுரை ஒத்தக்கடை அருகே இலங்கியேந்தல்பட்டி கிராமத்தில் பழமையான கோவில் இருந்தது. இந்த கோவில் கோவில் நீர் பிடிப்பு பகுதியில் கட்டப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. 
இதற்கிடையே இந்துமுன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள், இந்த கோவிலை இடிக்கக்கூடாது என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்திருந்தனர். இந்தநிலையில், நீர்பிடிப்பு பகுதியில் இருந்த அந்த கோவிலை இடிப்பதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த கோவில் இடிக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்