கரூரில் 13 பேருக்கு கொரோனா
கரூரில் நேற்று ஒரேநாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 188 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.