குட்டியுடன் முகாமிட்ட யானை

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் குட்டியுடன் யானை முகாமிட்டது.

Update: 2021-08-21 18:57 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானைகள், கரடிகள், புலிகள், காட்டெருமை, அணில்கள், மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் இந்த பகுதியில் யானைகள் அதிக அளவு இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலான மழை பெய்ததால் ஓடைகள், நீரோடைகள் மற்றும் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அடிவார பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மலையின் உச்சி பகுதிக்கு சென்று விட்டன. இந்நிலையில் தற்போது கோடை அருவி உள்ளிட்டவைகளை தண்ணீர் குறைந்துள்ளதால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவார பகுதியில் முகாமிட்டுள்ளன. அதில் பிறந்து சில நாட்களே ஆன யானைகள் குட்டியுடன் இருப்பதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்