திரிபுரா காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

திரிபுரா காங்கிரஸ் தலைவர் பிஜுஸ் காந்தி பிஸ்வாஸ் திடீர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Update: 2021-08-21 18:57 GMT
அகர்தலா, 

திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவர் பிஜுஸ் காந்தி பிஸ்வாஸ், தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று திடீரென அறிவித்தார். மேலும் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிஜுஸ் காந்தி, சொந்தக் காரணங்களால்தான் ராஜினாமா செய்வதாகவும், அதற்கான கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அனுப்பிவிட்டதாகவும் கூறியுள்ளார். 

டெல்லி தலைமை உத்தரவுக்கிணங்கவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள்தெரிவித்தன.

மேலும் செய்திகள்