கழிவறையில் விழுந்து இளம்பெண் சாவு

காரைக்குடி அருகே கழிவறையில் விழுந்து இளம்பெண் இறந்தார்.

Update: 2021-08-21 18:36 GMT
காரைக்குடி,

காரைக்குடி வைரவபுரம் 3-வது வீதியை சேர்ந்தவர் பஞ்சு. இவரது மகள் ஷாலினி (வயது 20). இவருக்கும் தேனி அருகே உள்ள சின்னமனூரை சேர்ந்த சரத்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.தற்போது கர்ப்பமாக இருந்த ஷாலினி தனது பிரசவத்திற்காக காரைக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். அவருக்கு கடந்த 9-ம் தேதி அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.அதன் பின் ஷாலினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கழிவறைக்கு சென்ற ஷாலினி தவறி விழுந்து மயக்கம் அடைந்தார். உடனே அவரை வீட்டில் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.இதுகுறித்து அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு ஆண்டே ஆன காரணத்தால் தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்