8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

பொள்ளாச்சி அருகே தாத்தூரில் 8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2021-08-21 15:03 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள தாத்தூரில் சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது புதருக்குள் இருந்து மலைப்பாம்பு வெளியே வருவதை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 இதுகுறித்து தோட்ட உரிமையாளர் மூலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனவிலங்குகள் பாதுகாப்பு குழுவை சேர்ந்த மீட்பு பணியாளர் வினோத்குமார் தலைமையிலான குழுவினர் தாத்தூருக்கு விரைந்து வந்தனர். 

பின்னர் பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து ஆழியாறு அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

மேலும் செய்திகள்