கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
ஆத்தூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் தலைப்பண்ணையூர் கிராமம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு கோவிலின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தலைப்பண்ணையூர் பூந்தோட்டம் பகுதி கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் மாரிசெல்வம் (வயது 24) என்பதும், கஞ்சா பொட்டலங்கள் போட்டு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.