மன்னார்குடியில் டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் செயல் விளக்கம்

மன்னார்குடியில் டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் செயல் விளக்கம் நடைபெற்றது.

Update: 2021-08-21 13:21 GMT
மன்னார்குடி,

மன்னார்குடி அருகே உள்ள ஆலங்கோட்டையில் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் பயிர்களுக்கு பாதுகாப்பு மருந்துகள் தெளிக்கும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இதை தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் ஜெ.சிவரஞ்சன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் எந்திரத்தின் செயல்திறன், விலை, இந்த எந்திரத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயன் போன்றவை குறித்து எந்திர நிறுவன அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்,

மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலு, திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், மன்னார்குடி வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் சு.ஞானசேகரன், மாநில மாணவரணி துணைச்செயலாளர் மன்னை த.சோழராஜன் ஆகியோர் இருந்தனர்.

முன்னதாக ஆலங்கோட்டையில் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்டார். அப்போது அவர் தேங்காய் நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் நவீன தொழில் முறையையும் மற்றும் தேங்காய் நார் கழிவை பிரித்து எடுத்த பின் மீதி உள்ள தூள்களை இறுக்கி கட்டிகளாக்கி ஏற்றுமதி செய்யப்படும் தொழில்நுட்பத்தையும் கேட்டறிந்தார்.

பின்னர் பசுமைக்கரங்கள் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரக்கன்றை அப்பகுதியில் சாலையோரம் நட்டு வைத்தார்.

மேலும் செய்திகள்