சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை

கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை நடைபெற்றது.

Update: 2021-08-21 11:28 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவிலில் வரலட்சுமி விரத விழா சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கொலு மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, கணபதி பூஜை, கும்பகலச பூஜை, சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி செய்தார்.
விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி மற்றும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு, அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்