ஓணம் பண்டிகையையொட்டி திருப்பூரில் 3 டன் செவ்வந்தி பூ விற்பனை
ஓணம் பண்டிகையையொட்டி திருப்பூரில் 3 டன் செவ்வந்தி பூ விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்
ஓணம் பண்டிகையையொட்டி திருப்பூரில் 3 டன் செவ்வந்தி பூ விற்பனை செய்யப்பட்டது.
மல்லிகை பூ
திருப்பூர் பல்லடம் ரோட்டில் காட்டன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் காய்கறி மற்றும் பூக்களை பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இங்கு வந்து வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் மார்க்கெட்டில் நேற்று மல்லிகை பூ விலை சரிவடைந்தது.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:- ஆடி மாதம் முடிந்து, ஆவணி மாதம் தொடங்கிய நிலையில் முதல் முகூர்த்த தினம் நேற்று என்பதால், மல்லிகை பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
செவ்வந்தி
ஆனால் விசேஷங்கள் முடிந்ததால் நேற்று மல்லிகை பூ விலை சரிவை சந்தித்தது. அதன்படி ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் முல்லை ரூ.400-க்கும், ஜாதிமல்லி ரூ.320-க்கும், அரளி ரூ.80-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், செவ்வந்தி ரூ.240-க்கும், பட்டுப்பூ ரூ.150-க்கும், ரோஜா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஓணம் பண்டிகை இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் மார்க்கெட்டிற்கு நேற்று 3 டன் செவ்வந்தி பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு 5 டன் செவ்வந்தி பூக்கள் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.