தடுப்பூசி செலுத்திய நிலையை உருவாக்க வேண்டும்

100 சதவீத மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திய நிலையை உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

Update: 2021-08-20 17:53 GMT
திருவாரூர்;
100 சதவீத மாற்றுத்திறனாளிகள்  தடுப்பூசி செலுத்திய நிலையை  உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார். 
ஆலோசனை கூட்டம் 
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது
விழிப்புணர்வு 
கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகளை இந்த நோய் தொற்றிலிருந்து காக்கும் வகையில்   தடுப்பூசி் போட்டுக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு   வருகிறது. எனவே தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீத மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்