சர்வசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சர்வசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தோகைமலை
தோகைமலை ஒன்றியம், புத்தூர் ஊராட்சி, எ.நடுப்பட்டியில் பிரசித்தி பெற்ற சர்வசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் மேளதாளம், வாண வேடிக்கையுடன் புனிதநீரை ஊர்வலமாக எடுத்து வந்து யாகசாலையில் வைத்தனர். பின்னர் யாகசாலையில் வைத்து பல்வேறு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலைசுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.