இண்டூர் அருகே கால்நடை டாக்டர் வீட்டில் நகை பணம் திருட்டு

இண்டூர் அருகே கால்நடை டாக்டர் வீட்டில் மர்ம நபர்கள் நகை பணம், வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றனர்.

Update: 2021-08-20 16:42 GMT
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே கால்நடை டாக்டர் வீட்டில் மர்ம நபர்கள் நகை, பணம், வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றனர்.
கால்நடை டாக்டர்
இண்டூர் அருகே சோமனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). கால்நடை டாக்டர். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அதேபகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றுள்ளார். 
இந்தநிலையில் நேற்று காலை சேகர் வீட்டுக்கு வந்த போது கதவு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.  
போலீசார் விசாரணை
வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து சேகர் இண்டூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்