கஞ்சா விற்ற பெண் கைது

கஞ்சா விற்ற பெண் கைது

Update: 2021-08-20 16:22 GMT
கஞ்சா விற்ற பெண் கைது
கணபதி

கோவை ரத்தினபுரி போலீசார் வழக்கம்போல ரோந்து பணியினை மேற்கொண்டிருந்தனர். அப்போது ரத்தினபுரி பகுதியில் உள்ள கண்ணப்பபுரத்தில்  சந்தேகப்படும்படியாக நடமாடிய ஒரு பெண்ணை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்தப்பெண் சாயிபாபா கோவில் பகுதியில் உள்ள கருணாநிதி நகரைச் சேர்ந்த அப்துல்லா என்பவரின் மனைவி சர்மிளா பேகம் என்பதும் வருமானத்திற்காக கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

 உடனடியாக அவரிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவினை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்