சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார்் பணியிடை நீக்கம்

கைதி தப்பி ஓடிய சம்பவத்தை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2021-08-20 13:00 GMT
குடியாத்தம்

கைதி தப்பி ஓடிய சம்பவத்தை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்ைத அடுத்த மேல்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்கொத்தகுப்பம் கிராமத்தில் வசிப்பவர் சிவராமன். இவரையும் இவரது மனைவி விஷ்ணுபிரியாவையும் முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தைச் சேர்ந்த குரு சத்யன் என்கிற சத்யராஜ் (வயது 31) என்பவர் கத்தியால் வெட்டினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

புதன்கிழமை நள்ளிரவு குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு குடியிருப்பில் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தியபோது கைதி சத்யராஜ் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை தள்ளிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டார்.

தப்பி ஓடிய கைதியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சத்யராஜின் படத்தை கிராம மக்களிடம் காட்டி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே கைதி சத்யராஜ் தப்பி ஓடிய சம்பவத்தில் மேல்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கே.சங்கரன், போலீஸ்காரர்கள் எஸ்.ஜலாலுதீன், பி.பாலாஜி ஆகியோர் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாலும், கவனக்குறைவாக நடந்து கொண்டதாலும் 3 பேரையும் பணியிடைநீக்கம் செய்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்