அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் பொறுப்பேற்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையராக கே.பி.அசோக்குமார் பொறுப்பேற்றார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையராக கே.பி.அசோக்குமார் பொறுப்பேற்றார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையராக பணியாற்றி வந்த ஞானசேகரன் கன்னியாகுமரி மண்டல திருக்கோவில்கள் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
மேலும் கடலூர் மண்டல இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் கூடுதல் பொறுப்பாக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் இன்று அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையராக கே.பி.அசோக்குமார் பொறுப்பேற்றார். அவரை கோவில் அலுவலர்கள் வரவேற்றனர்.