திருமண மண்டபம், கடைகளுக்கு அபராதம்

வந்தவாசியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத திருமண மண்டபம், கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-08-20 12:00 GMT
வந்தவாசி

வந்தவாசியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத திருமண மண்டபம், கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். 

அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் உஷாராணி தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, குழுவினர் நகராட்சியில் தீவிர ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 3 ஜவுளிக்கடைகள், ஒரு செல்போன்கடையில் கொரோனா  விதிமுறைகள் கடைப்பிடிக்கவில்லை, எனத் தெரிய வந்தது. 

அந்தக் கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். மேலும் ஒரு திருமண மண்டபத்துக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. 

ஆய்வுப்பணியில் நகராட்சி அலுவலர் சிவக்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் இயேசுதாஸ், லோகநாதன், ஏட்டு மணியரசன் ஆகியோர் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்