மணல் கடத்திய லாரி டிரைவர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-20 11:00 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா சொரக்காபேட்டை கொசஸ்தலை ஆற்றில் இருந்து சிலர் மணல் கடத்துவதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் நேற்று காலை அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். 

அப்போது டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டிப்பர் லாரியில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மணலுடன் டிப்பர் லாரியை கைப்பற்றினர்.

மேலும் இந்த லாரியை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வெங்கல் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜா (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்து பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருத்தணி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்