சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய தொழிலாளி போக்சோவில் கைது
சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34) . கூலித்தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியை கடத்திச்சென்று, கடந்த 4 மாதங்களாக கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, சக்திவேலை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.