நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் ஒரு அடி குறைகிறது

நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் தினமும் ஒரு அடி குறைகிறது

Update: 2021-08-19 21:07 GMT
மேட்டூர்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 12 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது அதாவது நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் நீர்மட்டம் சரிந்து வருகிறது கடந்த 17-ந் தேதி 69 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் (18-ந் தேதி) காலை 68.09 அடியாக குறைந்தது. நேற்று காலை 67.24 அடியாக மேலும் குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 693 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்