சேலத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு டாக்டர் பட்டம்
சேலத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சேலம்
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ்- நந்தினி தம்பதியின் மகன் தேஜஸ் (வயது 3). இந்த சிறுவனின் நினைவாற்றல் அபாரமாக உள்ளது. அதற்காக சிறுவன் தேஜஸின் அறிவுத்திறனை கவுரவிக்கும் வகையில் மதுரையைச் சேர்ந்த தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற சிறுவன் தேஜஸ், கடந்த ஒரு வருடமாக 82 நாடுகளின் தேசியக்கொடிகளை பார்த்து நாடுகளின் பெயரை சொல்லி உள்ளான். 102 பிரபல தலைவர்களின் புகைப்படத்தை பார்த்து அவர்களின் பெயர்களை சொல்லியும், ஒரு நிமிடத்தில் 51 நாடுகள் பற்றிய விவரங்களை கூறியும் வியக்க வைத்துள்ளான். சிறுவன் தேஜஸ் அறிவுதிறனுக்காக இதுவரை 16 பதக்கங்கள், உலக சாதனை சான்றிதழ் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.