ஆர்ப்பாட்டம்

சேத்தூரில் கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-08-19 19:49 GMT
தளவாய்புரம், 
சேத்தூரில் கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பெடல் தறி நெசவாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஊடை நூல் (இணை நூல்) 4 மாத காலமாக வழங்காததால் இவர்கள் வேலை இழந்து உள்ளதால் உடனே ஊடை நூல் வழங்கி தொடர்ந்து இவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தேவா, நெசவாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தங்கவேல், சேத்தூர் மேட்டுப்பட்டி நெசவாளர் சங்கத்தலைவர் மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்