வேலியில் சிக்கிய மான் சாவு

வெம்பக்கோட்டை அருகே வேலியில் சிக்கிய மான் பரிதாபமாக இறந்தது.

Update: 2021-08-19 19:37 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அருகே உள்ள வல்லம்பட்டி கண்மாய் காட்டுபகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் உணவு தேடி வந்த மான் ஒன்று கோட்டப்பட்டி பகுதியில் தோட்டத்தில் அமைக்கப்பட்ட வேலியில் சிக்கி எதிர்பாராமல் இறந்தது. இதுகுறித்து கோட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி, ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு மான் இறந்த இடத்தின் அருகிலேயே பிரேத பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்