குன்னூர்,
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா உள்ளது. குன்னூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான அந்த பூங்கா, 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்து இருக்கிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா பரவலால் பூங்கா மூடி கிடக்கிறது. எனினும் வருகிற 2-வது சீசனுக்காக பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி 1 லட்சத்து 60 ஆயிரம் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
அதில் சால்வியா, டேலியா, மேரிகோல்டு, ஆந்தூரியம், பேன்சி, பெட்டோனியா, பால்சம் போன்ற 23 வகைகள் உள்ளன. மேலும் தரைகள் சமன்படுத்தப்பட்டு, பூங்கா புதுப்பொலிவு அடைந்து வருகிறது. இதனால் 2-வது சீசனுக்காவது பூங்கா திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.