கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் வாலிபர் பலி

பொங்கலூர் அருகே, முந்திச் செல்ல முயன்ற கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2021-08-19 18:22 GMT
பல்லடம்
பொங்கலூர் அருகே, முந்திச் செல்ல முயன்ற கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
 கார்கள் மோதல்
பொங்கலூர் அருகே உள்ள வட்டமலை பாளையம் பகுதியில் நேற்று மாலை கோவை- திருச்சி மெயின் ரோட்டில் காங்கேயம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த தங்கராஜ் மகன் அரிகிருஷ்ணன் (வயது 24) ஓட்டிச் சென்றார். அவருடன் தந்தை தங்கராஜ் சென்றார். இவர்கள் காங்கேயத்தில் நடைபெற இருந்த உறவினர் இல்ல திருமணத்துக்கு சென் றதாக தெரிகிறது.
இவர்களது கார் முன்னால் சென்ற மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றது. அப்போது, எதிரே அரசு பஸ் ஒன்று வந்தது. இதனால் நிலை தடுமாறி முன்னால் சென்ற கார் மீது அரிகிருஷ்ணன் கார் மோதியது.
வாலிபர் பலி
 இந்த விபத்தில் இவர்கள் கார், மற்றும் முன்னால் சென்ற கார், உள்ளிட்ட மூன்று கார்களும் மோதி நிலை தடுமாறி ரோட்டின் கீழே பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அரிகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 
அவரது தந்தை தங்கராஜ்க்கு பல்லடம் தனியார் மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னால் சென்ற கார்களில் இருந்தவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த விபத்து குறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்