சோழவந்தான்,
சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த வரை பிடித்தனர். கே.பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரணன் மகன் வினோத்குமார் (வயது30) என்பது விசாரணையில் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 102 மதுபாட்டில்கள், 10,730 ரூபாயை போலீசார் கைப்பற்றினர்.