2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூரில் கத்தி முனையில் தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Update: 2021-08-19 18:00 GMT
திருப்பூர்
திருப்பூரில் கத்தி முனையில் தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வழிப்பறி
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு 2-வது ரெயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை முன்பு பனியன் நிறுவன தொழிலாளியான ஆனந்த் என்பவர் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த டேனியல் (வயது 20), மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் (19) ஆகியோர் ஆனந்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன், ரூ.500 ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினார்கள்.
இதுகுறித்து ஆனந்த் அளித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து டேனியல்,பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேர் மீதும் வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கு உள்ளது.
குண்டர் சட்டம்
இந்தநிலையில் டேனியல், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த், போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து டேனியல், பன்னீர்செல்வம் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார். அதன்பேரில் கோவை மத்திய சிறையில் உள்ள டேனியல், பன்னீர்செல்வம் ஆகியோரிடம் ஓராண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் நேற்று வழங்கினார்.

மேலும் செய்திகள்