மணலூர்பேட்டையில் பரபரப்பு கார் டிரைவரை இரும்பு குழாயால் தாக்கி கொல்ல முயற்சி வாலிபர் கைது
மணலூர்பேட்டையில் கார் டிரைவரை இரும்பு குழாயால் தாக்கி கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
திருக்கோவிலூர்,
இரும்பு குழாயால் தாக்குதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையை சேர்ந்தவர் வசந்தராஜ் (வயது 29), கார் டிரைவர். இவருக்கும் அதேஊரை சேர்ந்த நாகப்பன் மகன் ரமேஷ்(35) என்பவருக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று வசந்தராஜ் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ், வசந்தராஜிடம் தகராறு செய்ததோடு, அவரை இரும்பு குழாயால் தாக்கி, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.
கைது
இதில் பலத்த காயமடைந்த வசந்தராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, ரமேசை கைது செய்தனர். இந்த சம்பவம் மணலூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.