மது விற்ற 2 பேர் கைது

ஜோலார்பேட்டை அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-19 16:37 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வெங்காய பள்ளி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 30) என்பவர் அவரது வீட்டின் பின்புறத்தில் மறைவான இடத்தில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

 இதேபோல் பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்த புகழேந்தி (45) என்பவர் அவரது வீட்டின் பின்புறத்தில் மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்