கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-08-19 01:20 GMT
பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 39). தொழிலாளி. இவர், பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே நின்று கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக வந்த பெரியகுளம் தென்கரையை சேர்ந்த முத்தையா (26) என்பவர், தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பாலமுருகனிடம் பணம் பறிக்க முயன்றார். 

அப்போது அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முத்தையாவை பிடித்து, தென்கரை போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தையாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்