ஆவணி மாத முதல் முகூர்த்தம் நாளை என்பதால் திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.200 உயர்ந்தது

ஆவணி மாத முதல் முகூர்த்தம் நாளை என்பதால் திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.200 உயர்ந்தது

Update: 2021-08-19 01:19 GMT
திருப்பூர்
ஆவணி மாத முதல் முகூர்த்தம் நாளை என்பதால் திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.200 உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
மல்லிகை பூ விலை உயர்வு 
திருப்பூர் பல்லடம் ரோட்டில் காட்டன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் கடைகள் அமைத்துள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூ மற்றும் காய்கறிகளை வாங்கி செல்வார்கள். மற்ற நாட்களை விட முகூர்த்த தினம் மற்றும் விசேஷ நாட்களில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும். 
இந்நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) சுப முகூர்த்த தினம் என்பதால் மல்லிகை பூக்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக மல்லிகை பூ விலை ஒரு கிலோவுக்கு நேற்று ரூ.200 உயர்ந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
12 டன் வருகை 
இதுபோல் முல்லை ஒரு கிலோ ரூ.600-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.250-க்கும், அரளி ரூ.300-க்கும், பட்டுபூ ரூ.150-க்கும், ரோஜாப்பூ ரூ.240-க்கும், செவ்வந்தி ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 
திருப்பூர் காட்டன் மார்க்கெட்டிற்கு நேற்று மட்டும் 1½ டன் மல்லிகை பூ திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ஒட்டுமொத்தமாக 12 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. 

மேலும் செய்திகள்