பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா?
பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா?
ஊட்டி
ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசித்து வரும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்று வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது.
நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் மற்றும் சுகாதார ஊழியர்கள் எச்.பி.எப். பகுதியில் கணக்கெடுத்தனர். அங்கு கதவு எண் வாரியாக வீடுகளுக்கு சென்று வீட்டில் எத்தனை பேர் உள்ளனர், கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா என்று கேட்டறியப்படுகிறது. மேலும் முதல் டோஸ் அல்லது 2-வது டோஸ் செலுத்தி உள்ளார்களா என்று கேட்டறிந்து ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.
அதில் கதவு எண், எத்தனை நபர்கள், தடுப்பூசி செலுத்தியதற்கான விவரங்கள் குறிப்பிடப்படுகிறது. இந்த விவரங்கள் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.