ரெயில் மூலம் 3,320 டன் கோதுமை நெல்லை வந்தது

பஞ்சாப்பில் இருந்து ரெயில் மூலம் 3,320 டன் கோதுமை நெல்லை வந்தது.

Update: 2021-08-18 19:44 GMT
நெல்லை:

மத்திய அரசு சார்பில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் கோதுமை அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மத்திய உணவு கழகத்தில் இருந்து 3 ஆயிரத்து 320 டன் கோதுமை, சரக்கு ரெயிலில் 50 பெட்டிகளில் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சரக்கு ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர் அந்த கோதுமை மூட்டைகள் சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கிருந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கோதுமை மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

மேலும் செய்திகள்