தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்
அம்பை அருகே நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதால், வாகைகுளத்தின் மடைகளை சீரமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அம்பை:
அம்பை அருகே நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதால், வாகைகுளத்தின் மடைகளை சீரமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கருகும் நெற்பயிர்கள்
அம்பை அருேக வாகைகுளத்துக்கு வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் இருந்து கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. வாைககுளம் பாசனம் மூலம் சுமார் 450 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது.
எனினும் மடைகளை சரியாக பராமரிக்காததால், வாகைகுளம் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் அப்பகுதியில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட ெநற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
மடைகளை சீரமைத்து...
கோடைகாலத்தில் வாகைகுளத்தில் இருந்த தண்ணீரை மீன்பாசி குத்தகைக்காக வெளியேற்றியதால் இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குளத்து பாசனமாக உள்ள இப்பகுதியை சில தனிநபர்கள் கால்வாய் பாசனமாக உருவாக்கியதால் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே வாைககுளத்தில் மடைகளை சீரமைத்து தண்ணீரை முறையாக நிரப்பினால்தான் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.