பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
விருதுநகரில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெண்ணிடம் இருந்து 6 பவுன் நகையை பறித்து சென்றனர்.
விருதுநகர்,
விருதுநகரில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெண்ணிடம் இருந்து 6 பவுன் நகையை பறித்து சென்றனர்.
கோபுர தரிசனம்
விருதுநகர் முத்துராமன்பட்டி பவுண்டு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பத்மினி (வயது 61). இவர் தினசரி காலையில் அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று கோபுர தரிசனம் செய்வது வழக்கம்.
அதேபோல் நேற்று காலை இவர் கோபுர தரிசனம் செய்ய நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மூதாட்டி பத்மினியின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்தனர்.
நகை பறிப்பு
மூதாட்டி பத்மினி அவர்களுடன் போராடியதில் அவர் அணிந்திருந்த 7பவுன் தங்க சங்கிலியில் 6 பவுன் கொள்ளையர்களிடம் சிக்கியது. அதனுடன் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் மாயமானார்கள். இதுபற்றி பத்மினி கொடுத்த புகாரின்பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.