குண்டர் தடுப்பு சட்டத்தில் 4 பேர் கைது
குண்டர் தடுப்பு சட்டத்தில் 4 பேர் கைது
கமுதி
கமுதி அருகே மேலகன்னிச்சேரிைய சேர்ந்தவர் அழகுராஜா(வயது 24). இவரை அதே ஊரைச் சேர்ந்த முனியசாமி, மணிகண்டன், நாகேந்திரன், வழிவிட்டான் ஆகியோர்ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் இவர்கள் 4 பேரையும் கலெக்டர் சந்திரகலா பரிந்துரையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரையும் பேரையூர் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.