டிராக்டர் மோதி பெண் பலி; கணவர் படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டிராக்டர் மோதி பெண் பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2021-08-18 18:51 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
சிவகாசி அருேக உள்ள மணியம்பட்டியை சேர்ந்தவர் சோத்திரம் (வயது43). இவரது மனைவி ராஜலட்சுமி (40). இவர்கள் இருவரும்  ராஜலட்சுமியின் அம்மா சின்னதாய் என்பவரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்று கொண்டு இருந்த போது ஆலத்தூர் நொச்சிகுளம் விலக்கு அருகே வரும் போது அந்த வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பகுதியை சேர்ந்த சமுத்திரக்கனி (47) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர், சோத்திரம் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் சோத்திரம், ராஜலட்சுமி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ராஜலட்சுமி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தநிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே  ராஜலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக சோத்திரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்