ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஸ்ரீரங்கம், ஆக.19 -
ஸ்ரீரங்கம் குஜிலியான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 28). ஆட்டோ டிரைவரான இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாயிடம் வற்புறுத்தி வந்தார். இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.