வேதாரண்யம் அருகே, கஞ்சா விற்ற 2 பேர் கைது

வேதாரண்யம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-18 10:51 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யத்தை அடுத்த புதுப்பள்ளி பகுதியில் சம்பவத்தன்று வேட்டைக்காரனிருப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது புதுப்பள்ளி சக்கிலியன் ஆற்று இரண்டாவது பாலத்தின் அடியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் விற்பனை செய்ய 300 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணையில் அவர்கள் புதுப்பள்ளியை சேர்ந்த ராஜ்குமார் (வயது23), அதே பகுதியை சேர்ந்த சிவசாந்தன் (25) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வேட்டைக்காரனிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், சிவசந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் 2 பேரும் காணாமல் போய்விட்டதாக அவர்களது தாயார் உள்பட 3 பெண்கள் நேற்று முன்தினம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்