சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
பாலியல் பலாத்காரம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பீமன் மகன் ரஞ்சித்(வயது 21), ராஜேந்திரன் மகன் சத்யராஜ்(24), ரவி மகன் விஜய்(28), உத்திராபதி மகன் ரமேஷ்(23).
இவர்கள் 4 பேரும், 13 வயது சிறுமியை வெவ்வேறு நாட்களில் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த சிறுமியின் தாய், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
4 பேர் கைது
அதன்பேரில் 4 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நேற்று கைது செய்து விசாரித்து வருகிறார்.