நகை திருடிய பெண் கைது

நகை திருடிய பெண் கைது

Update: 2021-08-17 19:46 GMT
ராஜபாளையம்
ராஜபாளையம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 55). இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில், அவரது வீட்டில் வேலை பார்த்த மகாலட்சுமி(60) என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நகையை திருடியது தெரியவந்தது. இதைதொடர்ந்து மகாலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்