1,900 மூட்டை பருத்தி ரூ.60 லட்சத்துக்கு ஏலம்
நாமக்கல்லில் நேற்று 1,900 மூட்டை பருத்தி ரூ.60 லட்சத்துக்கு ஏலம் போனது.
நாமக்கல், ஆக.18-
நாமக்கல்லில் நேற்று 1,900 மூட்டை பருத்தி ரூ.60 லட்சத்துக்கு ஏலம் போனது.
பருத்தி ஏலம்
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வழக்கம் போல் நேற்று ஏலம் நடந்தது.
இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 1,900 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.
ரூ.60 லட்சத்துக்கு விற்பனை
இந்த பருத்தி மூட்டைகள் ரூ.60 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 512 முதல் ரூ.8 ஆயிரத்து 333 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ.8 ஆயிரத்து 11 முதல் ரூ.10 ஆயிரத்து 260 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 859 முதல் ரூ.5 ஆயிரத்து 700 வரையிலும் ஏலம் போனது. இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.
திருச்ெசங்கோடு
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகத்தில் பருத்தி, எள் ஏலம் நடந்தது. பருத்தி பி.டி.ரகம் ரூ.6 ஆயிரத்து 889 முதல் ரூ.7 ஆயிரத்து 490 வரையிலும், சுரபி ரகம் ரூ.7 ஆயிரத்து 626 முதல் ரூ.10 ஆயிரத்து 326 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 350 மூட்டைகள் ரூ10 லட்சத்துக்கு விற்பனை ஆனது.
சிவப்பு எள் கிலோ ரூ.64.90 முதல் ரூ.98.40 வரையிலும், கருப்பு எள் கிலோ ரூ.85 முதல் ரூ.102.90 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.84.20 முதல் ரூ.94.90 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 100 மூட்டைகள் ரூ.2 லட்சத்துக்கும் ஏலம் போனது. அடுத்த பருத்தி, எள் ஏலம் வருகிற 24-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.